Wednesday, July 13, 2011

காமெடி பீஸ்


து நடந்து ஒரு ஐந்தாறு மாதங்களுக்கு மேல் இருக்கும்.

அவர் எங்கள் அலுவலத்தில் வேலைக்கு வந்து கொண்டிருந்தார். (வேலை செய்துகொண்டிருந்தார் என்று சொல்ல மனசாட்சி தடுக்கிறது) குறிப்பிட்ட அந்த நாளில் எனக்கொரு 15,000 தேவையாய் இருந்தது. கையிருப்பு போக 9000 குறைவாக இருக்கவே ஒரு அலுவலக நண்பரிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். நம்ம ஆள் குறுக்கே வந்தார்.

“என்ன கிருஷ்ணா.. ஃபைனான்ஷியல் ப்ராப்ளம்?” என்றார் சிதம்பரம் கணக்காய்.

“ஆமா சார்…”

“என்கிட்ட எல்லாம் கேட்க மாட்டீங்களா” என்று உரிமையார் சொல்லவே, முன் அமர்ந்திருந்தவரை எந்திரிச்சுப் போய்யா என்று சொல்லாத குறையாக துரத்தி விட்டு, இவரிடம் ‘ஒரு நைன் தவுசண்ட் வேணும் சார்.. ஒன் வீக்ல தந்துடறேன்’ என்றேன்.

அவர் தன் மொபைலை எடுத்தார். “என் பேங்க்ல பேலன்ஸ் எவ்வளவு இருக்குன்னு மொபைல்லயே பார்க்கலாம்’ என்றார். ‘பேங்க்ல இருக்கும். உன் அக்கவுண்ட்ல இருக்குமா’ என்று கேட்கத் தவறிவிட்டேன்.

பார்த்தவர், என்னிடம் திரும்பி, விரல்களில் எண்ணிக்கை செய்தவாறே..
‘ஒம்பதாயிரம் போதுமா’ என்றார்.. போதும் தெய்வமே என்று சொல்ல வந்து, தெய்வத்தை கட் செய்தேன்.

இப்போது அவர் மணி பார்த்தார். “ம்ம்.. 12 ஆச்சு. கரெக்டா ரெண்டரை மணிக்கு வாங்கிக்கோங்க.. சாப்டுட்டு வரும்போது ஏடிஎம்ல எடுத்துட்டு வர்றேன்” என்றார்.

** **

நான்கு மணி. அதற்குள் அவர் என் டேபிளை இரண்டு மூன்று முறை கடந்திருந்தார். கடக்கும்போதெல்லாம் அவசர அவசரமாகவே...

நான் நிறுத்தி “சார்... என்னாச்சு?” என்றேன்.

“ஓ... மறந்துட்டேன்.. கரெக்டா 5 மணிக்கு வாங்கிக்கோங்க”

நான்: “மணி நாலரை..”

“இங்க இருக்கற ஏடிஎம் போக எவ்ளோ நேரம் வேணும்? வந்துடுவேன்” என்றார்.

அஞ்சு. ஆறு. ஏழு.

அதுவரை என் பக்கமே அவர் வரவில்லை. ஏழரைக்கு நானே போய்.. “சார்.. வேணாம்.. நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன்..: என்றேன் அவர் என் பக்கம் வருவதற்கு சங்கடப்படுகிறார் என்பதறிந்து.

“ச்சே... என்ன கிருஷ்ணா? நானாத்தானே வந்து ஹெல்ப் பண்றேன்னேன்.. ஏன் என்னை ஒதுக்கறீங்க? நான் உங்க ஃப்ரெண்ட் இல்லையா?”

“ஐயோ அப்படியில்லைங்க.. நீங்க பிஸின்னு நினைக்கறேன்.. டைமிருக்காது உங்ககிட்ட. அதான்..” - இழுத்தேன்.

“அப்டில்லாம் இல்ல. நைட் நீங்க போறதுக்குள்ள உங்க கைல நைன் தவுசண்ட் இருக்கும்”

9 மணிக்கு நான் கிளம்பும்போது அவர் கேட்டில் பைக்கை உதைத்துக் கொண்டிருந்தார்.

என்னைப் பார்த்ததும் ‘கிருஷ்ணா.. வெளில மெய்ன் கேட்ல வெய்ட் பண்றேன். வாங்கிக்கோங்க” என்றார். நான் சரி என்றேன். ஆனால் அவர் அங்கு இல்லை. நானும் எதிர்பார்க்கவில்லை என்பதால் ஏமாற்றமிருக்கவில்லை.

இரண்டு நாள் அதோ இதோ என்று ஓடியது. இடையில் வேறொரு நண்பரிடமிருந்து அந்தத் தேவை பூர்த்தியாகிவிட்டிருந்தது. தானாக வந்து உதவுகிறேன் பேர்வழி என்று சொன்னவரைப் பார்க்கும்போதெல்லாம் அவராக வந்து இதோ இதோ என்று டயலாக் விட்டுக் கொண்டிருந்தார்.

மூன்றாவது நாள். அவர் அலுவலக விஷயமாக பெங்களூர் கிளம்பிக் கொண்டிருந்தவர் அஃபீஷியல் டூர் என்பதால் அட்வான்ஸ் வாங்க என் கையெழுத்துக்காக வந்தார். நான் ஒன்றும் பேசாமல் அட்வான்ஸ் ஸ்லிப்பில் கையெழுத்திட்டுக் கொடுத்தேன்.

அருகிலிருந்த ஒரு மெமோ பேப்பரை எடுத்தார்.

“இதுல உங்க அக்கவுண்ட் நம்பரை எழுதுங்க கிருஷ்ணா” என்றார்.

“எதுக்குங்க?”

“நான் சொன்ன மாதிரி 9,000 இல்ல.... பத்தாயிரமா ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடறேன். ஒரு வாரம்ன்னு சொன்னீங்கள்ல? பத்து நாள் டைம் எடுத்துக்கோங்க. அப்பறம் குடுத்தா போதும்” என்றார்.

அந்தத் தேவை முடிந்தது என்று சொன்னதும் ‘ப்ச்.. விளையாடாதீங்க.. நான் சொன்ன மாதிரி தரலைன்னு கோவம் உங்களுக்கு” என்றார்.. அதெல்லாம் இல்லை என்றபோதும் விடாமல் பேச ஆரம்பித்தார்.


எனக்கு அந்த விளையாட்டு பிடித்துப் போயிருந்தது. அக்கவுண்ட் நம்பரை எழுதிக் கொடுத்தேன்.

அடுத்த நாள் ஏதோ ஒரு தருணத்தில் எனக்கு அலுவலத்தில் போரடிக்கவே அவருக்கு அலைபேசினேன்.

“சார்.. பணம் போட்டிருக்கீங்களா?”

“ஓ! கிருஷ்ணா.. மறந்தே போய்ட்டேன்.. நல்ல வேளை.. இங்க பக்கத்துல SBI இருக்கு. நான் ட்ரான்ஸ்ஃபர் பண்றேன்” என்றார்.

நாலு மணிக்கு அவராகவே கூப்பிட்டு “பேங்க் போனேன் கிருஷ்ணா.. நீங்க அக்கவுண்ட் நம்பர் எழுதிக் கொடுத்த பேப்பரை சூட்கேஸ்லயே வெச்சதால போட முடியல.. நாளைக்கு பண்ணிடவா?” என்றார்.

நான் END CARD போடும் எண்ணத்துடன் ‘ரீல் அந்துடுச்சு சார். முடியல என்னால. விட்ருங்க..” என்றேன். உண்மையாக அதை அவரிடம் சொல்லும்போது சிரித்து விட்டேன்.

“பார்த்தீங்களா.. கோச்சுட்டீங்க?” என்றார்.

“ஐய.. கோவமெல்லாம் இல்லைங்க.. எனக்கு பணமும் கிடைச்சு, அதைக் குடுத்தவருக்கும் நான் குடுத்துட்டேன்.. மேட்ச் முடிஞ்சுது. இன்னும் நான் ஓவர் போடுவேன்னு நிக்கறீங்க” என்றேன்.

“ப்ச்... நல்லா தெரியுது நீங்க கோச்சுட்டீங்கன்னு. கண்டிப்பா நாளைக்கு உங்க அக்கவுண்ட்ல பணம் இருக்கும்” என்று சொல்லிவிட்டு ஃபோனை வைத்துவிட்டார்.

அவ்வளவுதான். அதற்கப்புறம் அவரும் என்னிடம் கேட்கவில்லை. நானும். எதாவது பேசப்போனால் கூட இதைப் பற்றி பேசுவாரோ என்று எனக்கு அச்சமாக இருக்கும்.

முடிந்தது அந்த விஷயம்.

அதன்பிறகு அவர் வேறு அலுவலகத்துக்கு மாற்றலாகி சென்று விட்டார்.

போன வாரம் எங்கள் அலுவலகம் பக்கம் வந்தார்.

“காஃபி சாப்பிவோமா கிருஷ்ணா?”

“கண்டிப்பா” என்றபடி நடந்தேன். அவர் ஒரு சிகரெட் வாங்கி பற்ற வைத்தார்.

“ரெண்டு காஃபி என்றார்”

வந்தது. சாப்பிட்டோம்.

நான் காசை எடுத்தேன். டக்கென்று என் கையைத் தடுத்தார்.

“என்ன பழக்கம் இது? வெய்ட்..” என்றவர் கேண்டீன்காரரைப் பார்த்து “எவ்ளோ ஆச்சுங்க?” என்றார்.

“எட்டு.. பதினாறு.... இருவத்தி ஒன்ரை ஆச்சுங்” என்றார் கடைக்காரர்.

இவர் என்னை முறைத்தவாரே.. “நாந்தானே கூப்ட்டேன். அப்பறம் எப்படி நீங்க காசெடுக்கலாம்?” என்றபடியே பாக்கெட்டில் கைவிட்டார். சட்டைப் பாக்கெட். பின் பேண்ட் பாக்கெட். அப்படியே ஒவ்வொரு பையாக துழாவினார்..

கடைக்காரர் பக்கம் திரும்பி “எவ்ளோ சொன்னீங்க?”

“இருவத்தி ஒன்ரைங்க”

“ஓகே.. என் கணக்குல வைங்க.. வந்து தர்றேன்” என்றார்.

நான் பொறுக்க மாட்டாமல் இருவது ரூவாயை எடுத்து அவரிடம் கொடுத்து “நீங்களே குடுங்க” என்றேன்.

“ப்ச்.. கிருஷ்ணா.. என்னை அசிங்கப்படுத்தறீங்க.. நாந்தானே உங்களைக் கூப்ட்டேன். அப்ப நாந்தானே குடுக்கணும். பத்து ரூவாதான் இருக்கு. மத்தது பெரிய நோட்டா இருக்கு. அதான்...” என்றார்.

“சரிங்க.. இதை வாங்கி நீங்களே குடுங்க.. நான் சிகரெட்டுக்கு காசு தரமாட்டேன்னு உங்களுக்கு தெரியும். அதுனால இத நீங்களே குடுத்துட்டு 4 ரூவா மட்டும் எனக்கு குடுங்க” என்றேன்.

“சரி கிருஷ்ணா.. இப்டி பண்லாம். இந்த இருவது ரூவாயை நான் கடனா வாங்கிக்கறேன்.. நாளைக்கு திருப்பித் தர்றேன். சரியா?” என்றபடி வாங்கி கடைக்குக் கொடுத்தார்.

அதை நான் திருப்பிக் கேட்கவே இல்லை. அவராக இரண்டு தினம் முன்பு வந்து “கிருஷ்ணா உங்க மேல எனக்கு கோவம்” என்றார்.

“ஏங்க?”

“அன்னைக்கு இருவது ரூவா வாங்கினேன்ல. நீங்க இதுவரைக்கும் கேட்கவே இல்லை. நான் உங்கமேல காட்ற உரிமையை நீங்க என் மேல காட்ட மாட்டீங்கறீங்க” என்றார்.

“சரி.. குடுங்க..” என்றேன்.

“நாளைக்கு தர்றேன். ஆனா நீங்க மறக்காம கேட்கணும்”

“சரிங்க”

“நான் ஒண்ணு சொன்னா சொன்ன மாதிரி! யார்கிட்ட வேணும்னா கேளுங்க” என்றார்.

பின்னால் அவரது அசிஸ்டெண்ட் சிரிப்பை அடக்க முடியாமல் திரும்பிக் கொண்டான்.

“இன்னொண்ணும் சொல்றேன் கிருஷ்ணா.. அன்னைக்கு நீங்க கேட்ட மாதிரி 10000 ரூவா உங்க அக்கவுண்ட்ல போடுவேன்.. பத்து நாள் கழிச்சு தந்தீங்கன்னா போதும்” என்றார்.

இப்போது எனக்கு நிஜமாகவே மயக்கம் வருவது போல் இருந்தது.

** **

43 comments:

settaikaaran said...

அந்தக் காமடிப்பீஸை இனி ஆஃப்பீஸ் பக்கம் பாத்தா கல்லாலையே அடிச்சு துரத்துங்க ...

வந்தியத்தேவன் said...

ஹாஹா நல்ல காமடி , வடிவேலு விவேக் இதனை வாசித்தால் அடுத்த படத்தில் பயன்படுத்திவிடுவார்கள்.

மதுரை சரவணன் said...

nanbaa kaamadikkaakavaa.. unmaiyilee ippadi irukkiraarkalaa..?

நடராஜன் said...

பாஸ் முடியல! அந்த ஆள் நம்பர் இருந்தா கொடுங்க ஒரு பத்து லட்சம் தேவப்படுது

சுசி said...

நீங்க ரொம்ப பொறுமைசாலி பரிசல் :))

//
நான் சிகரெட்டுக்கு காசு தரமாட்டேன்னு உங்களுக்கு தெரியும்.
//
அட எதுக்கு அந்த ஒண்ரைய குடுக்கலை நீங்கன்னு சட்னு நினைச்சிட்டேன்..
பாராட்டுகள் :)

பிரதீபா said...

இத்தனையும் நிஜமா நடந்திச்சுன்னு என்னால நம்பவே முடியலைங்க பரிசல் !

பிரதீபா said...

இப்படியும் ஒருத்தர் இருக்கறாரா? அநியாயம் !

Anonymous said...

என்ன கொடும சரவணன்:-)

HVL said...

நீங்க எங்கிட்ட கேட்டிருக்கக் கூடாதா?
ஐடியா நல்லாயிருக்கு!

Rathnavel Natarajan said...

இதே மாதிரி படம் காட்டும் நபர்கள் நிறைய இருக்கிறார்கள்.
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

Madhavan Srinivasagopalan said...

//பின்னால் அவரது அசிஸ்டெண்ட்//

Best Comedy

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

:))

செல்ல நாய்க்குட்டி மனசு said...

இப்படி ஆட்களை எப்படித்தான் சகித்துக் கொள்கிறீர்களோ கிருஷ்ணா.

புதுகை.அப்துல்லா said...

நீங்க சொல்லியிருக்கும் ஆல் சென்னையில உள்ள ஒரு ஆள் மாதிரி இருக்கு. ஆனா நீங்க சொல்லியிருக்கும் தொகைதான் குறைவு :)))))

அன்பேசிவம் said...

:-) செம்ம செம்ம....

அகல்விளக்கு said...

//ரீல் அந்து போச்சு... முடியல என்னால்.... //

ஹாஹாஹாஹா...

சூப்பர் என்ட் கார்ட்...

அகல்விளக்கு said...

//பாஸ் முடியல! அந்த ஆள் நம்பர் இருந்தா கொடுங்க ஒரு பத்து லட்சம் தேவப்படுது//

இந்த அப்ரோச் ரொம்ப பிடிச்சிருக்கு...

விக்னேஷ்வரி said...

கலகல பதிவோட வந்திருக்கீங்க. கலக்கலா இருக்கட்டும் இனி வரும் பதிவுகளும்.

பாண்டி-பரணி said...

:)................

Sen22 said...

//ஐய.. கோவமெல்லாம் இல்லைங்க.. எனக்கு பணமும் கிடைச்சு, அதைக் குடுத்தவருக்கும் நான் குடுத்துட்டேன்.. மேட்ச் முடிஞ்சுது. இன்னும் நான் ஓவர் போடுவேன்னு நிக்கறீங்க” என்றேன்.//

:)))))))

M.G.ரவிக்குமார்™..., said...

இதுக்குத் தான் உங்களை அடிக்கடி பதிவெழுதச் சொல்றது!நீங்க என்னடான்னா சின்ன வீடே கதின்னு கெடக்குறீங்க!..

அமுதா கிருஷ்ணா said...

நிஜமா இப்படி எல்லாம் கூடவா ஆட்கள் இருப்பாங்க...

Ramesh.K.S said...

கிருஷ்ணா அந்த காமெடி நண்பரின் பெயர் என்ன ப்ளீஸ் சொல்லுங்க

Ramesh.K.S said...
This comment has been removed by the author.
ஜோசப் பால்ராஜ் said...

உங்களுக்கு பணம் குடுக்குறேன்னு சொல்லிட்டு ஒருத்தரு இழுத்தடிச்சதுக்கே இம்புட்டு ஃபீல் ஆவுறிங்களே, எங்க கிட்ட எல்லாம் பணத்த வாங்கிட்டு ஒருத்தரு இழுத்தடிச்சாரு பாருங்க, அத மட்டும் எழுதுனோம் அம்புட்டுதான். எங்கன்னு பன்மையில சொல்லியிருக்கேன் ஏன்னா அது ஒரு ஐஞ்சு ஆறு பேரு கிட்ட இருக்கும் அந்த இ.வா லிஸ்ட்ல.

இரசிகை said...

kasssshhhhttaam..........

Rajasurian said...

:)))))))))))))

நாகராஜ் said...

உங்களுக்கு பணம் குடுக்குறேன்னு சொல்லிட்டு ஒருத்தரு இழுத்தடிச்சதுக்கே இம்புட்டு ஃபீல் ஆவுறிங்களே, எங்க கிட்ட எல்லாம் பணத்த வாங்கிட்டு ஒருத்தரு இழுத்தடிச்சாரு பாருங்க, அத மட்டும் எழுதுனோம் அம்புட்டுதான். எங்கன்னு பன்மையில சொல்லியிருக்கேன் ஏன்னா அது ஒரு ஐஞ்சு ஆறு பேரு கிட்ட இருக்கும் அந்த இ.வா லிஸ்ட்ல.
சூப்பர் !

சார் என்னோட அக்கௌன்ட் நம்பர் கொடுத்திருங்க நாங்களும் போர் அடிச்சா போன் போட்டுக்கறேன்

kugan said...

<< Flash Game Developers க்கு இது ரொம்ப உதவியா இருக்கும் ப்ளீஸ்>>
Flash Game Developers அதுவும் சின்ன சின்ன games பண்றவங்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு, நீங்க bug இல்லாம game செய்வீங்களா? உங்களுக்கு நிரந்தர வருமானம் வேணுமா? நீங்க உங்க game-ஐ விற்க கூட வேண்டாம். இன்னும் விவரமா தெரிஞ்சுக்க இதை Dollygals Developers (http://dollygals.com/developers) கிளிக் பண்ணுங்க.

குரங்குபெடல் said...

"Comedy, நகைச்சுவை "

எதுக்கு இப்படி லேபெல்னு புரியலையே . . . .

நன்றி

சிநேகிதன் அக்பர் said...

நல்ல அனுபவம் :)

Mahi_Granny said...

அடிக்கடி எழுதுங்க பரிசல்

தராசு said...

உங்க மேல எனக்கு ரொம்ப கோவம் தல, ஒரு தேவைன்னு வந்தா எங்கிட்ட கேக்க மாட்டீங்களா,

ஆமா, எவ்வளவு பத்தாயிரமா, இன்னைக்கு சாயந்திரம் உங்க அக்கவுண்ட்ல பாருங்க

Butter_cutter said...

காமெடி நல்லா இருக்கு

Wanderer said...

படிக்கும் போதும் சரி, யோசிச்சி பாக்கும்போதும் சிரிப்பை அடக்க முடியவில்லை. சார்லி சாப்ளின் காமெடி போல இருந்தது. அனுபவிச்சு எழுதியிருக்கறீங்க! சூப்பர்

சுரேகா said...

எப்படியாவது நம்பர் கேப்பாய்ங்க !
குடுத்துறாதீங்க!
அடிச்சுக்கூட கேப்பாய்ங்க!
அக்கவுண்ட் நம்பர் குடுத்துறாதீங்க!
என்ன சொல்லிக்கேட்டாலும்...

குடுத்துறாதீங்க!
குடுத்துறாதீங்க!

:)
:)
அதெப்புடி உன்னைய தேடி வந்து வம்பிழுக்கிறாய்ங்க!!

சுபா said...

பரிசல். யாருகிட்ட கேக்குறீங்க.. அண்ணன்கிட்டதான. தைரியமா கேளுங்க. ஒன்பதினாயிரம் போதுமா. யாருகிட்ட கேக்குறீங்க.. அண்ணன்கிட்டதான.

சின்ன கண்ணன் said...

இந்த பதிவை சம்பந்தப்பட்ட நபர் படிதாவது திருந்த சொல்லுங்க ஜீ...
( படிக்க வாய்ப்பு உள்ளதா?/?)

மல்லிகார்ஜுனன் said...

பாஸ் இதுல காமெடி பீசு யாரு'ன்னு எனக்கு சந்தேகமா இருக்கு..

//ஒரு காப்பி சாப்பிடலாம் வர்ரீங்களா?

Rajan said...

இன்னுமா இந்த ஊரு அவர நம்பிட்டு இருக்குன்னு நேனைக்ராறு அவரு?

kullabuji said...

ROFL :) :)

kullabuji said...

ROFL :) :)

செல்வா said...

எப்பவாச்சும் நேரம் போகலைனா அவருக்கு போன் பண்ணி போன் பண்ணி விள்ளாடலாமானா ?